விஜய்க்கு பக்க பலமாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளனர். இந்நிலையில், தீர்ப்பு நாளில் ஆதவ் அர்ஜுனா மிகவும் கான்ஃபிடன்ட்டாக “மக்கள் சக்தி என்னும் விசை” என பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
முருகனிடம் சிறப்பு பூஜை.. திருத்தணியில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் தந்தை..!
ஆதவ் அர்ஜுனா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு,
தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் ‘மாற்றத்திற்கான புயல்’ நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்!
சரியாக, மாலை 7 மணிக்கு ‘தேர்தல் முடிவுகள்’ எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்!
மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி…
— Aadhav Arjuna (@AadhavArjuna) May 3, 2026

