தேர்தல் நாளன்று விஜய் மாதிரியே வெள்ள சட்டையும், காக்கி பேண்டும் அணிந்து வந்தவர்கள் அதன் மூலம் தங்களது ஆதரவை விஜய்க்கு என்பதை மாற்று வாக்காளர்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால், இது என்ன பள்ளி ஆண்டு விழாவா இப்படி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம், பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது என்றும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..
அதே சமயம், இப்படி ஒரு டிரஸ் கோட் படையை இதுவரை தமிழ்நாடு அரசியலில் பார்க்கவில்லை. இது அனைவருக்கும் ஒரு வகையில், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் சீனியர் நடிகரான ராதா ரவி சமீபத்தில் தனியா youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்திற்கு கிடைத்த விசில் சின்னம் மிகவும் ஈஸியான சின்னம்.
கையில் வேலுடன் விஜய்.. திருச்செந்தூரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..!

வாக்களிக்க நான் நின்று கொண்டிருந்தபோதே விசில் அடித்து காண்பிக்கிறார்கள். விசில் அடித்து ரவி அண்ணா என கூப்பிடுகிறார்கள். உடனே நான் டேய் அதெல்லாம் செய்யக்கூடாது. க்யூவில் நிற்கும்போது தவறு என கூறினேன். ஆனால், விஜயை பொறுத்தவரை ரொம்ப அமைதியான ஆள். பூகம்பமே வந்தாலும் அவர் நகர மாட்டார் என்று ராதாரவி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

