நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கர இந்த திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற படத்தின் நிகழ்ச்சியில் கே எஸ் ரவிக்குமார் மேடையில் தனுஷை அடித்தது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!
அதாவது, உலக நாயகன் கமலஹாசன் தன்னை கமலஹாசன் என்று அழையுங்கள் போதும் என்றார். அல்டிமேட் ஸ்டார் அஜித் தன்னை அஜித்குமார் என்று அழையுங்கள் போதும் என்று கூறியிருந்தார். உங்களை தயாரிப்பாளர் ஐஸ்ரி கணேஷ் உங்களுக்கு பெயர் கொடுத்தார். அப்படி உங்களை அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா என்று தனுஷிடம் கே எஸ் ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தான் ஆட்சேபனை இருக்கிறது என்னை தனுஷ் என்று மட்டும் அழைத்தால் போதும் என்று பதில் அளித்திருந்தார். இதற்கு கே.எஸ். ரவிக்குமார் உன்னை எதில் அடிப்பது என்று தெரியவில்லை என்று கூறி மேடையின் கீழே கிடந்த பூக்களை அள்ளி அவரை நோக்கி வீசினார்.

உடனே தனுசு சார் நீங்க என்னை அடித்தது கூட வாழ்த்துவதாக தான் தெரிகிறது என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதற்கு கே எஸ் ரவிக்குமார் நீ நல்லா இருக்க வேண்டும் என்று தான் பூக்களை கொண்டு அடித்தேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாக வருகிறது.
#KSRavikumar: I gave Ulaganayagan title for Kamal sir. Now Ishari sir given #KalaiAsuran title for you. #Ajithkumar & #KamalHaasan sir told that they don't want title. What abt you❓#Dhanush: Yeah I have objection. I'll be happy if they call just Dhanushpic.twitter.com/yNhQ6UdNpR
— AmuthaBharathi (@CinemaWithAB) April 27, 2026

