Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு MSME – மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..!
    கோவை

    இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு MSME – மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    MSME UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கோவையில் தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME துறையின் பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளதாகவும், நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும், மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

    ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாக MSME-க்கள் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். தொழில்துறையினர் சந்தித்து வரும் சவால்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், அலுமினியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் நிலைமை சீராகி பழைய விலை நிலவரம் திரும்பும் என்றும் தெரிவித்தார்.

    ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சிறு தொழிலாளர்களுக்கும் ‘MSME கிரெடிட் கார்டு’ வழங்குவது குறித்த அறிவிப்பு, அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
    ​
    மூலப்பொருள் விலையைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், கோவையில் உள்ள கள நிலவரங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்து அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    கோயம்புத்தூரின் தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையில் வலுவாகச் சென்றடையத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கயிறு வாரியம் போன்ற அமைப்புகள் மூலம் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாடு, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

    Bihar Politics Jitan Ram Manjhi Political Update India Union Minister Interview அரசியல் செய்திகள் மத்திய அமைச்சர் பேட்டி ஜிதன் ராம் மாஞ்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026

    பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026

    இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘RELOS’ ஒப்பந்தம்: ஆர்க்டிக் முதல் இந்தியப் பெருங்கடல் வரைஅதிரடி!

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.