சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம், தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கும் தனது இல்லத்திற்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது புகார்கள் மீது சிபிஐ விசாரணை கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தார். இருப்பினும், சி.வி.சண்முகத்திற்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், அவருக்குப் பாதுகாப்பு தேவை என்பதை அவர் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தமிழக டிஜிபி அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
TVK ஆட்சியை கவிழ்க்க சதி.. 180 கோடி ரூபாய் கைமாறியதா? பகீர் வாக்குமூலம்..!
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் சி.வி.சண்முகத்தின் உறவினர்கள் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி, தற்போதும் அதே போன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

