பஞ்சங்கம்
• தமிழ் தேதி: விசுவாவசு வருடம், ஆனி 9.
• திதி: வளர்பிறை தசமி மாலை 06:15 வரை, பின்னர் ஏகாதசி.
• நட்சத்திரம்: சுவாதி விடியற்காலை 01:45 வரை, பின்னர் விசாகம்.
• யோகம்: சித்த யோகம் (விடியற்காலை 01:45 வரை மரண யோகம், அதன் பின் சித்த யோகம்).
• ராகு காலம்: மதியம் 03:00 – 04:30.
• எமகண்டம்: காலை 09:00 – 10:30.
• நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 / மாலை 04:45 – 05:45.
• சந்திராஷ்டமம்: பூரட்டாதி விடியற்காலை 01:45 வரை மற்றும் உத்திரட்டாதி. ராசி: மீனம்.
தினசரி ராசி பலன்கள்
மேஷம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தி லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ரிஷபம்
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சுப காரிய பேச்சுக்கள் கைகூடும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
மிதுனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கடகம்
தைரியமாக முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் உயரப் புதிய வழிகள் பிறக்கும் நாள்.
சிம்மம்
சுய தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்
சகோதர வழியில் ஒற்றுமை நிலவும். தைரியமான முடிவுகளால் காரிய வெற்றி காண்பீர்கள். மனதிற்குள் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம்
வாழ்க்கைத்துணையின் ஆதரவு பலம் சேர்க்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
தனுசு
எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். பழைய கடன் சுமைகள் குறையத் தொடங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
நிர்வாகத் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குப் பெரும் பலம் தரும்.
கும்பம்
வியாபாரத்தில் போட்டி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வருமானம் அதிகரிக்க புதிய வழிகள் பிறக்கும்.
மீனம்
முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். பிறரிடம் பேசும்போது தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

