Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!
    ஆன்மிகம்

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kalabhairavar-worship-krishna-paksha-ashtami-benefits-remedies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக அனைவருக்கும் வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், ஒருவரின் வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கத்தான் செய்யும்.

    அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்களே இங்கு ஏராளம். வேலை, தொழிலில் மட்டும் அல்ல குடும்பத்தினராகவும் அவர்கள் இருப்பார்கள். அவ்வகையில், பகைவராக இருந்தாலும், அவர்களை தூம்சம் செய்ய இறைவனின் கால பைரவர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

    kalabhairavar-worship-krishna-paksha-ashtami-benefits-remedies

    கால பைரவர் தன்னிடத்தில் யார் வருவார் என்று எப்போதும் எதிர்நோக்கி காத்துக் காத்துக் கொண்டிருப்பாராம். அவரின் திருவடியை சரணம் அடைந்தவர்களுக்கு காக்கும் கடவுளாக கால பைரவர் இருந்து வருகிறார். பொதுவாக, காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அளிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னால் சிவனின் காலபைரவர் ரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கையாகவே இருந்து வருகிறது.

    பொதுவாக, சிவபெருமானின் 64 வடிவங்களில் காலபைரவர் வடிவம் முக்கியமானதாக கருதப்படுகிறது. கால பைரவர் எதிரிகளுக்கு அச்சத்தை தருபவர் தன்னை சரனடைந்த பக்தர்களை ஆபத்திலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வாழ்வில் வளம் சேர்க்கக்கூடிய அற்புதமானவர் என்பது பலரும் அறிந்த நிதர்சனமான உண்மை.

    படைப்பு தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியவர்களில் உயர்ந்தவர் என்று பிரம்ம தேவர் கர்வம் கொண்டாராம். அப்போது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க சிவபெருமானின் அம்சமாக தோன்றியரே காலபைரவர் என்று புராண கதைகளில் கூறப்படுகிறது. உலகிற்கு உணர்த்திய சிவ ரூபம் காலபைரவர் என்பது சிறப்பு.

    kalabhairavar-worship-krishna-paksha-ashtami-benefits-remedies

    காசி நகரின் காவல் தெய்வம் காலபைரவர். காசி யாத்திரை செல்பவர்கள் காலபைரவர் கோவிலுக்கு சென்று வந்தால், யாத்திரை பூர்த்தி ஆகும். சிவன் கோவில்களில் வடக்கில் கால பைரவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். காலபைரவரை வழிபட்டால் வறுமை நிலை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். அஷ்டமி பூஜை மிகவும் விஷேசமானது.

    பொதுவாக, தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வழிபாடு செய்வது சிறப்புகளைப் பெற்றுக் கொடுக்கும். மன தைரியத்தை உண்டாக்கும் எதிரி தொல்லை நீங்க நாம் கால பைரவை வழிபட வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் தைரியத்தை கால பைரவர் வழிபாடு கை கொடுக்கும். கர்வத்தை அழித்து கடமையே வாழ்க்கையில் நிரந்தரம் என்பதை உணர்த்துபவர் காலபைரவர்.

    kalabhairavar-worship-krishna-paksha-ashtami-benefits-remedies

    காலபைரவர் வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்

    வாகனம்

    பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு அளிப்பது, குறிப்பாக கருப்பு நிற நாய்களுக்கு உணவிடுவது பைரவரின் அருளைப் பெற்றுத் தரும்.

    தேய்பிறை அஷ்டமி

    காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்நாளில் அவரை வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.

    பரிகாரங்கள்

    கடன் தொல்லைகள் நீங்கவும், எதிரிகள் பயம் அகலவும், இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் காலபைரவர் வழிபாடு சிறந்த பலனைத் தரும்.

    நைவேத்தியம்

    மிளகு வடை மாலை சாற்றுதல் மற்றும் தயிர் சாதம் நிவேதனம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

    விளக்கேற்றுதல்

    தேங்காய் மூடியில் மிளகு மூட்டை கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது (மிளகு தீபம்) பைரவர் வழிபாட்டில் மிக முக்கியமானது.

      வழிபாட்டு பலன்கள்

      • பயம் மற்றும் பதற்றம் நீங்குதல்.
      • நேர மேலாண்மை மற்றும் காரிய சித்தி உண்டாகுதல்.
      • ராகு – கேது தோஷங்கள் விலகுதல்.

      Ashtami Tithi Rituals Bhairavar Worship for Debt Kalabhairavar Remedies Kalabhairavar Worship Tamil Pepper Vada for Bhairavar Rituals to remove Enmity Theypirai Ashtami Benefits அஷ்டமி திதி வழிபாடு எதிரிகள் தொல்லை நீங்க கடன் தீர பைரவர் வழிபாடு காலபைரவர் பரிகாரம் காலபைரவர் வழிபாடு தேய்பிறை அஷ்டமி பலன்கள் மிளகு வடை மாலை பலன்
      Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
      Prime Reporter

      Related Posts

      ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

      August 3, 2026

      ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

      August 1, 2026

      ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

      July 29, 2026

      செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

      July 28, 2026

      அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

      July 25, 2026

      ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

      July 21, 2026
      Leave A Reply Cancel Reply

      Recent Posts

      உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

      August 4, 2026

      வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

      August 4, 2026

      த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

      August 4, 2026

      எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

      August 4, 2026

      உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

      August 4, 2026
      Don't Miss

      வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

      August 4, 2026

      கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

      த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

      August 4, 2026

      எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

      August 4, 2026

      உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

      August 4, 2026
      Stay In Touch
      • Facebook
      • YouTube
      • Twitter
      • Instagram
      • Threads
      Latest Reviews
      Facebook X (Twitter) Instagram YouTube Threads
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • About Us
      • Privacy Policy
      • Terms & Conditions

      U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

      Type above and press Enter to search. Press Esc to cancel.