Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிள் பயணம்.. மனதைக் கவர்ந்த ஈழத்து விருந்தோம்பல்..!
    இந்தியா

    இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிள் பயணம்.. மனதைக் கவர்ந்த ஈழத்து விருந்தோம்பல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Indian cyclists promote tourism and anti-drug awareness in Jaffna
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழு. யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

    இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம். சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவிலிருந்து வருகை தந்த ‘டீம் பைசன்’ (Team Bison) துவிச்சக்கரவண்டிப் பயண அணியினருக்கான கௌரவிப்பு நிகழ்வு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

    அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்:

    ஆயிரக்கணக்கான வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகச் சிறந்ததும் நெருக்கமானதுமான உறவு காணப்படுவதுடன், இந்தியா எமக்குத் தொடர்ந்தும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது. மூன்று தசாப்த காலக் கொடிய போரால் வடக்கு மாகாணம் கடுமையாகப் பாதிக்கபட்டிருந்தாலும், தற்போது இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்றது.

    யாழ்ப்பாணத்துக்கும் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்தியச் சுற்றுலாவிகளின் வருகை எமது மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. நாமும் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம்.

    வடக்கு மாகாணத்தில் தற்போது சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதேநேரம், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான தலைமையின் கீழ், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மிகப்பெரியதொரு போராட்டத்தை எமது நாடு தற்போது முன்னெடுத்து வருகின்றது. போதைப்பொருளை எமது நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம்.

    அதேவேளை, எமது ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும். எமது மூதாதையர்கள் பாரம்பரிய கிராமப்புற உணவுகளை உட்கொண்டதாலேயே மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், சிறுவர்கள் தற்போது துரித உணவுகளை நாடும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளின் பக்கம் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வலிமையான சமூகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சைக்கிள் சுற்றுலா, இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதுடன், சமூகத்துக்குச் சாதகமான பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பதற்கான சிறந்ததொரு முன்மாதிரியாகும்.

    சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளங்காணப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. நெடுந்தீவு போன்ற தீவுகளில் அனுமனின் பாதச் சுவடுகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

    இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நீங்கள் பார்வையிடுவதுடன், உங்களின் இந்தப் பயண அனுபவங்களை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

    ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய உயரிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ;டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் பங்கேற்றிருந்தனர்.

    இவர்களுக்கான கௌரவத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், சுற்றுலாப் பணியகத் தலைவர், பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர். அத்துடன், இந்தக் குழுவினர் நயினாதீவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உதவிப் பொருட்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

    Anti-drug awareness Jaffna Cultural tourism Jaffna India Sri Lanka friendship Indian cyclists in Sri Lanka Jaffna tourism 2026 Northern Province Governor speech Team Bison cycling இந்திய சைக்கிள் குழு இலங்கை இந்தியா உறவு டீம் பைசன் யாழ்ப்பாணம் நயினாதீவு வருகை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு யாழ்ப்பாணம் சுற்றுலா வடக்கு மாகாண ஆளுநர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026

    குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.