Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? பட்டியல் போட்டு திமுகவை அட்டாக் செய்த விஜய்!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? பட்டியல் போட்டு திமுகவை அட்டாக் செய்த விஜய்!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Where is the safety of women in Tamil Nadu.. Vijay attacked DMK by posting a list!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆளும் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துவருகின்றனர்.

    அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.

    இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.

    மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.

    நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.

    மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.

    சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.

    கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.

    சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.

    கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.

    திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு…

    எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

    இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

    பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?

    தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.

    Where is the safety of women in Tamil Nadu.. Vijay attacked DMK by posting a list!

    தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?

    இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

    சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Actor Vijay CM Stalin crime DMK Politics குற்றம் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.