நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்தகால காதல் உறவு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்துப் பகிரங்கமாகப் பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன், தான் முன்பு டேட்டிங் செய்த உறவு தனக்கு கடுமையான மனநல மற்றும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பேச்சுக்கு தடை.. அவை மரபுகளை மீறிய விவகாரம்: அவைக் குறிப்புகள் நீக்கம்..!
அந்த உறவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை (Toxic Relationship) காரணமாக கடும் மன அழுத்தம், பதற்றம், பேனிக் அட்டாக்குகள் (Panic Attacks), தொடர் தலைவலி, கை-கால் நடுக்கம், திடீர் உடல் எடை குறைவு மற்றும் தீவிர கண் பாதிப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். தொடர்ச்சியான மன உளைச்சல்கள் காரணமாக தனது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு, கண்ணீர்க் சுரப்பியில் வீக்கம் உருவானதால் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்ததாகவும் அவர் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இரவு முழுவதும் அழுதுவிட்டு, மறுநாள் காலையில் படப்பிடிப்பிற்குச் சென்று சிரமப்பட்டு நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

