சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக இயற்கையான பழங்களை பயன்படுத்தலாம்.
இக்காலத்தில், தர்பூசணி, வெள்ளரிக்காய், மாம்பழம், முலாம்பழம் போன்றவை சீசன் பழங்களாகும். இந்த பழங்கள் நீர்ச்சத்து நிறைந்தது மட்டுமின்றி ஏராளமான சத்துக்களை கொடுக்கக்கூடியது.

முலாம்பழம் மற்றும் பால் பவுடர் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடரை எடுத்து அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் மசித்த முலாம்பழக் கூழை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு கழுவ வேண்டும். முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்ரைசரை சருமத்தின் தடவ வேண்டும். இப்படி அடிக்கடி போட்டு வந்தால் சருமம் எப்போதும் பொலிவோடு இருக்கும்.
முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு தேன்.. இப்படி பயன்படுத்தி பாருங்க..!

முலாம்பழம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
ஒரு பவுலில் இரண்டு டேபிள்ஸ்பூன் முலாம்பழம் எடுத்து கூழாக எடுத்துக்கொண்டு அத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து மசித்துக்கொள்ள வேண்டும். முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும். முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் ஒரு ஸ்க்ரப் போன்று செயல்படுவதால் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகத்தில் பிரகாசத்தை கொடுக்கிறது.

முலாம்பழம் மற்றும் பீச்
இதனை பழத்தின் கூட ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதனை பத்து நிமிடங்கள் முகத்தில் ஊற வைக்க வேண்டும். குழுந்த நீரில் கழுவ வேண்டும் சிறந்த பலனை பெற இந்த ஃபேஸ் பேக் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

முலாம்பழம், கடலை மாவு, எலுமிச்சை ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பவுலில் சிறிதளவு கடலை மாவு எலுமிச்சை சாற்றினை எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது முலாம்பழக் கூழை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுவதோடு முகப்பரு வருவதும் தடுக்கப்படுகிறது.
முலாம்பழம் மற்றும் தேன்

முலாம்பழக் கூழை எடுத்து அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

