Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»உயிர்பெறும் கல் நந்தி?.. பாவங்களை போக்கும் ‘யாகந்தி’ கோயிலில் நடக்கும் அதிசயம்..!
    ஆன்மிகம்

    உயிர்பெறும் கல் நந்தி?.. பாவங்களை போக்கும் ‘யாகந்தி’ கோயிலில் நடக்கும் அதிசயம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வுத் துறையும் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    இந்த கோவில் வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறப்படுகிறது. 15 ஆம் ஆண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தை சேர்ந்த மன்னர் ஹரிஹர புக்கராய என்பவரால் கட்டப்பட்டது இந்த கோவில். இது ஹைதராபாத்தில் இருந்து 308 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடாவில் இருந்து 359 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    பண்டைய கால பல்லவர்கள் சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் மரபுகளை இந்த கோவில் பிரதிபலிக்கிறது என்று வரலாறுகள் கூறுகிறது. இந்த நந்தி சிலையின் அளவு தினமும் அதிகரித்து வருவதால் அதை சுற்றியுள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளன. நந்தியின் வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் இன்னும் பல தூண்களை அகற்ற வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்கு முன்பு இருக்கும் இந்த பிரம்மாண்ட நந்தி சிலை முன்பு சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இந்த நந்தி சிலை செய்யப்பட்ட கல் விரிவடையும் தன்மை கொண்டது என்றும், அவர்கள் நம்புகிறார்கள்.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    இந்த சிலை முன் வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகையில் முன்பெல்லாம் இந்த நந்தியை வலம் வரக்கூடிய அளவு இடம் இருந்ததாகவும், தற்போது சிலையின் அளவு பெரிதானதால் வலம் வர இடமில்லாமல் போய்விட்டது என்ற குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கோவில், அகத்திய மாமுனிவர் முன்னாள் வெங்கடேஸ்வருக்கு கோவில் நிறுவ நினைத்தாராம்.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    ஆனால், கட்டுமான நேரத்தில் பெருமாளின் சிலையில் இருக்கும் கட்டைவிரல் உடைந்து கோவில் கட்டுமானம் நடுவிலேயே நிறுத்த வேண்டி நிலை ஏற்பட்டதாம். இதனால், ஏமாற்றம் அடைந்த அகத்திய முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் கண் முன் தோன்றிய சிவபெருமான் இந்த இடம் கைலாயத்தை போன்ற தோற்றம் கொண்டதால் இது பெருமாளுக்கு உரிய கோவில் அமைக்க உகந்த இடம் இல்லை என தெரிவித்ததாகவும், இதை அடுத்து இங்கு சிவபெருமானுக்கு அகஸ்தியர் கோவில் எழுப்பினார் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    முனிவர்கள் இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் தவம் மேற்கொண்டு இருந்ததாகவும், அப்போது ஒரு முனிவரை காகங்கள் தொந்தரவு செய்ததாகவும், இனி இந்த இடத்தில் காகங்கள் நுழையக்கூடாது என சபித்தார் என்ற கதையும் வரலாறுகளில் கூறப்படுகிறது. காகம் சனிபகவானின் வாகனமாகும். காகம் நுழைய முனிவர் சாபமிட்டதால் காகம் நுலைய தடை ஏற்பட்டதால், இங்கு சனி பகவானும் நுழைய மாட்டார் என்கின்றனர்.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போன்ற சிவலிங்கம் இங்கு இல்லாமல் சிவனும் பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரே கல்லினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது இன்னும், கூடுதல் சிறப்பு.

    yaganti-uma-maheswara-temple-growing-nandi-mystery

    மலைகள் சூழ அழகிய இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த கோவிலில் அழகிய புஷ்கரணி அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து, தண்ணீர் பாய்வது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புஷ்கரணியில் ஆண்டு முழுவதும் எப்பொழுதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது தற்போது வரை தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. கோவிலில் நுழைவதற்கு முன் இந்த புனித நீரில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பதால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    Andhra Pradesh mysterious temples Growing stone mystery Nandi statue miracle facts Spiritual wonders of India Uma Maheswara Temple Kurnool Yaganti temple growing Nandi Yaganti temple history Tamil ஆந்திரா அதிசய கோயில்கள் ஆன்மீக ரகசியங்கள் உமா மகேஸ்வரர் கோயில் கர்னூல் நந்தி சிலை அதிசயம் யாகந்தி கோயில் வரலாறு யாகந்தி வளரும் நந்தி வளரும் கல் நந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.