விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, தற்போது அந்தப் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்தச் சூழலில், அவர்களது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோர் தங்களது தாயார் சங்கீதா பக்கமே உறுதுணையாக நிற்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் விஜய்யோடு பேசுவதில்லை என்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தீயாய் பரவும் ஹேஷ்டேக்குகள்.. விஜய் ரசிகர்களை சீண்டும் ரஜினி ரசிகர்கள்..!
குடும்பத்தில் இத்தகைய சூழல் நிலவினாலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் பார்க்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

