பஞ்சங்கம் (மே 26, 2026)
• தமிழ் தேதி: விசுவாவசு வருடம், வைகாசி 12.
• திதி: வளர்பிறை தசமி (காலை 07:05 வரை), பின்னர் ஏகாதசி. (இன்று வைகாசி சுக்ல ஏகாதசி விரத நாள்).
• நட்சத்திரம்: அஸ்தம் (இரவு 09:50 வரை), பின்னர் சித்திரை.
• யோகம்: சித்த யோகம்.
• ராகு காலம்: மதியம் 03:00 – 04:30.
• எமகண்டம்: காலை 09:00 – 10:30.
• நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 / மாலை 04:45 – 05:45.
• சந்திராஷ்டமம்: சதயம் (இரவு 09:50 வரை) மற்றும் பூரட்டாதி. (ராசி: கும்பம்)
தினசரி ராசி பலன்கள்
மேஷம்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் கைகூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
ரிஷபம்
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் இனிய நாள்.
மிதுனம்
நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கடகம்
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு கூடும்.
சிம்மம்
தொழில் ரீதியான பயணங்கள் வெற்றியைத் தரும். பெற்றோரின் ஆசி கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சுப செய்திகள் வந்து சேரும் இனிய நாள்
கன்னி
வேலைப்பளு குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப காரிய பேச்சுக்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
துலாம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும்.
விருச்சிகம்
புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதி தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
தனுசு
வியாபாரத்தில் போட்டி குறையும். கடன் சுமைகள் குறைய வாய்ப்புள்ளது. திருமண முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம்
மன உறுதி கூடும். நினைத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்ப மேன்மை உண்டாகும்
கும்பம்
பேச்சில் நிதானம் மிக அவசியம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அமைதியாக இருப்பது மன உளைச்சலைக் குறைக்கும்.
மீனம்
திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். நண்பர்களால் அனுகூலமான செய்திகள் வரும்.

