ஐசிசி இன்று வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அபார முன்னேற்றம் கண்டுள்ளார். 790 ரேட்டிங் புள்ளிகளுடன், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை பின்னுக்கு தள்ளி அவர் உலகின் நம்பர் 1 பேட்டராக உயர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அரைசதம் பதிவு செய்த மந்தனாவின் சிறப்பான ஆட்டமே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2025ஆம் ஆண்டில் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தரவரிசையில் உச்சத்தில் இருக்கும் மந்தனா, சர்வதேச டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலானா கிங், சோஃபி எக்லெஸ்டோனை முந்தி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
மேலும், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நான்கு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மூன்று இடங்கள் சரிந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

