நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.இவரது கடைசி படமான ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனையால் இன்னும் வெளியாகவில்லை
நீதிமன்றமும் கைவிரித்த நிலையில், வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு, சென்சார் போர்டு மூலம் மீண்டும் முறையிட்டுள்ளதால், மறுஆய்வுக்காக படம் அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிப்ரவரி மாதத்துக்குள்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் படம் ஏப்ரலில் தான் வெளியாகும் என விநியோகஸ்தர் தரப்பில் சொல்லப்படுவதாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் படம் எப்போது வெளியானாலும் கொண்டாட காத்துள்ளனர்.
இதனிடையே விஜய் படம் எதுவும் வெளியாகாத காரணத்தால் மீண்டும் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த வருடம் தான் கில்லி ரீ ரிலீஸ் ஆனது. மீண்டும் நாளை படத்தை ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதனால் மீண்டும் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் செய்ய ரசிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். படத்தின் முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இதுவரை முன்பதிவில் மட்டும் ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

