Close Menu
    What's Hot

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வேங்கைவயலுக்குத்தான் போகவில்லை.. மதுரை செல்ல யார் தடுத்தார்கள்? முதலமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி!
    தமிழ்நாடு

    வேங்கைவயலுக்குத்தான் போகவில்லை.. மதுரை செல்ல யார் தடுத்தார்கள்? முதலமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி!

    Prime ReporterBy Prime ReporterJanuary 23, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Who stopped for going to Madurai? Annamalai responds to the Chief Minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரை எய்ம்ஸ் என்ற எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?

    Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள்.

    மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

    AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?

    இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?

    கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?

    நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.

    ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    annamalai CM Stalin DMK Madurai AIIMS Vengaivayal அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Don't Miss

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என சூலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலை முருகன் முன்பு 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி.

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.