19.8.2026
மேஷம்
நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்பாடுகளில் வழக்கத்தை விட தாமதம் ஏற்படலாம். மற்றவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து, அன்றாட பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்
கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கணிவாகப் பேசி புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
வழக்குகள் அல்லது எதிர்ப்புகள் சாதகமான முடிவுக்கு வரும். உடற்பயிற்சி மற்றும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.
கடகம்
பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலை மற்றும் எழுத்துத் துறையினருக்குப் படைப்பாற்றல் கூடும்.
சிம்மம்
வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மன அமைதி தரும்.
கன்னி
குறுகிய தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். இளைய சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
துலாம்
குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும். நிதி தொடர்பான விஷயங்களில் யோசித்து எடுத்த முடிவுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்
ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் வேகம் காட்டுவீர்கள். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் தடையின்றி முன்னோக்கி நகரும்.
தனுசு
பயணங்களின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம். சட்டப்பூர்வமான ஆவணங்களில் கையெழுத்திடும் முன் நிதானம் தேவை.
மகரம்
தொழிலில் எதிர்பார்த்த முதலீடுகள் வந்து சேரும். பழைய நண்பர்களின் திடீர் சந்திப்பு புதிய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். நிலுவையில் இருந்த அரசு தொடர்பான அனுமதிகள் சுலபமாகக் கிடைக்கும்.
மீனம்
தந்தைவழி உறவுகளுடன் இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள்.

