தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனது வாக்கை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலுவிடம், இந்த முறை வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து வாக்களிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
“நல்ல விஷயம் தானே… நம்ம மக்கள், நம்ம ஊருக்கு வந்து வாக்களிக்கிறார்கள், அதைச் சந்தோஷமாகப் பார்க்க வேண்டும்” என்றார்.
மேலும், அவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாக வந்தார்கள் என்ற கேள்விக்கு,
“ரொம்ப நாளா ஓட்டுப் போடாம இருந்திருப்போம், இந்த முறை போடலாம்னு வந்திருப்பாங்க. அப்புறம், நம்ம ஓட்டை வேற யாராவது போட்டுட்டாங்களோன்ற சந்தேகத்துலயும் வந்திருப்பாங்க”
எனத் தனது பாணியில் கலகலப்பாகப் பதிலளித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் அவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
இந்த முறை தமிழ்நாடு அரசியல்வாளத்தில் திரைத்துறையில் இருந்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் மூலமாக களமிறங்கியுள்ளதால், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. மே 4ஆம் தேதி வாக்கிய எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

