Close Menu
    What's Hot

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திரள் நிதி கேட்ட சீமான்… வாரி வழங்கும் மக்கள்.. இதுவரை வந்த தொகை இத்தனை லட்சமா?
    தமிழ்நாடு

    திரள் நிதி கேட்ட சீமான்… வாரி வழங்கும் மக்கள்.. இதுவரை வந்த தொகை இத்தனை லட்சமா?

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Seeman asked for a lot of money from public for 2026 Assembly Election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டமன்ற தேர்தலுக்காக திரள் நிதியை மக்களிடம்பெறப் பேவாதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

    வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.

    வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.

    Seeman asked for a lot of money from public for 2026 Assembly Election

    எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.

    https://donate.naamtamilar.org/election_campaign_2026

    திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்.

    தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! புரட்சி எப்போதும் வெல்லும்! நம் வெற்றி அதைச் சொல்லும்! நம் இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

    வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி… pic.twitter.com/Fk4ykLwHmd

    — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 18, 2026

    மேலும் பணம் செலுத்துவதற்கான லிங்கையும் இணைத்துள்ளார். 2 கோடி ரூபாய் தேவை என கூறியுள்ள நிலையில் இதுவரை 17 லட்சத்து 44 ஆயிரத்து 899 ரூபாய் வந்துள்ளதாகவும் அதில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

    Naam Tamilar Politics Public seeman அரசியல் திரள்நிதி நாம் தமிழர் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Don't Miss

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    ஏப்ரல் 26, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன் மற்றும் சந்திராஷ்டம நேரக் குறிப்புகள் இங்கே.

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.